android software


1.Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய

தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். 




இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. 

இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். 

Cha - ச
sa - ஸ 
sha - ஷ
A - ஆ
a- அ
ro - ரொ
roo - ரோ
Roo -றோ
Luu - ளூ
luu - லூ
za - ழ
ZE - ழே
nj- ஞ்
nja - ஞ
q- ஃ

இதே போல தான் மற்ற அனைத்துக்கும். நான் என் அலைபேசியில் தட்டச்சு செய்ததை கீழே படத்தில் காணலாம். 



REQUIRES ANDROID: 1.6 and up

PRICE:Free


இதை தரவிறக்கம் செய்ய. இங்கே கிளிக் செய்யவும்                                                                                        
                                   

2.Team Viewer For Android - ஆன்டிராய்டில் இருந்து கணினியை இயக்க


அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி கண்ட்ரோல் செய்யலாம். 


இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை. 

ஆன்லைனில் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும். 

கீபோர்டு பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள கீபோர்டு தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம். 

 left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது. 


Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

இதை தரவிறக்கம் செய்ய.இங்கே கிளிக் செய்யவும்


3.Android தொலைபேசிகளுக்கான Top 5 இணைய உலாவிகள் ( web bowsers)


இன்றைய நாளை பொறுத்தவரை மிக பிரபலமான, அதிகமானவர்களால் விரும்பி உபயோகிக்கப்படும் தொலைபேசி இயங்குதளம் என்றால் அது Android தான். இதனால் பல நிறுவனங்களும் Android இற்கான Application களை அதிகமாக வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் Android இற்கான Top 5 இணைய உலாவிகளை பார்ப்போம்.


Opera Mini Browser

Opera Mini பொதுவாக அனைத்து தொலைபேசிகளிலும் சிறப்பான சேவையை வழங்கும் இணைய உலாவியாகும். Android இலும் இந்த உலாவியை பெற்றுக்கொள்ளலாம்.


தரவிறக்க :Opera Mini Browser

Dolphin Browser HD

இந்த உலாவி மிகவும் வேகமானதும் அதேநேரம் கையாளுவதற்கு இலகுவானதும் ஆகும். Dolphin Mini, Dolphin, Dolphin HD என மூன்று Version களாக வெளிவந்துள்ளது இந்த உலாவி

தரவிறக்க :Dolphin Browser HD

Skyfire Web Browser

இந்த இணைய உலாவியின் சிறப்பம்சம் Flash Support ஆகும். கூடவே வேகமாகவும் செயற்படக்கூடியது. சிறந்த ஒரு இணைய அனுபவத்தை இந்த உலாவியில் பெற்றுக்கொள்ளலாம்.


தரவிறக்க : Skyfire Web Browser

Firefox Browser

கணினிக்கான சிறந்த இணைய உலாவியை வழங்கிவந்த Mozilla நிறுவனத்தின் Android தொலைபேசிக்கான பதிப்பு இதுவாகும். இது வேகமானதும், இலகுவானதும், ஒழுங்குபடுத்தக்கூடியதுமாகும். இதன் Security மற்றும் Privacy Feature சிறந்த Online பாதுகாப்பை தருகிறது.


தரவிறக்க : Firefox Browser

UC Browser

உலகளாவிய ரீதியில் அதிக பாவனையாளர்களால் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவி. வேகமான செயற்பாட்டை கொண்டது.
தரவிறக்க : UC Browser

4.